பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், – ‘ஆறெனுக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும் திருமங்கை ஆழ்வார் அனுபவத் தொடரில் –
“பரகாலன் பனுவல்கள்” – *பரகால நாயகியின் ஆற்றாமை* என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே மணியரங்கன் ஸ்வாமி* – {Sri U Ve K E B Rangarajan Swami} – ‘தூவிரிய மலருழக்கி’ இரண்டாவது பகுதி அர்த்த விசேஷங்கள் வழங்குகிறார்.
ஒலிப்பதிவு எண்: 0007-PP—036 of Year 2
இதில்
**நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு
**குறிப்பறிந்து கூறாயே
**இளமதிக்கு வளை இழந்தேற்கு
**தண்குடந்தைக் குடமாடீ!
**நிலையாளா வேண்டாயே ஆகிலும்
கை இலங்கு வேற்கலியனின் ஐயைந்தும் ஐந்தும் அனுபவிப்போம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 08 கார்த்திகை |23-11-2020
திருவரங்கம்போல் திருவாலியில் நிர்வாணமாக இருப்பவன் என்கிறான் என்ற ஒன்றே அடியேனின் தகுதியாகக் கொண்டு இந்த வாய்ப்பினை யளித்த நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் திருவடித் தாமரையின்கண்ணும் இதனைச் செவிமடுத்தார் திறத்தும் அடியேனின் அன்பு கலந்த மங்களாசாசனங்களுடன் கூடிய ப்ரணாமங்கள்
க்ஷமிக்கவேண்டும் நிர்வாணமாக என்ற பிழையை நித்யவாசமாக என்று திருத்தி வாசிக்கவும்