Sengkannmaal Vinnappam, Ampavazhavilai, Thoongu ponmaalaigal …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

திருவாடிப்பூர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
செங்கண்மால் விண்ணப்பம் அம்பழவிலை தூங்குபொன்மாலை – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே ராஜகோபால் கண்ணன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**செங்கண்மால் என்பது ஏன்?
**ஸர்வஜ்ஞனுக்கு விண்ணப்பம் செய்ய வேணுமோ?
**அம்பழவிலைக்கு, ஆண்டாளுக்கு உள்ள ஸாம்யம்
**கொன்றை மாலைகள் தூங்குவதேன்?

சங்கொலி ,சார்ங்க நாண் ஒலி கேட்டு உய்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 23 | Date 08 Aug 2021 ||

3 comments

  1. அடியேன் ஸ்வாமி! நாச்சியார் திருமொழி, 8 – 7, 8 – 8,மற்றும் 9 -9 பாசுரங்களுக்கு, ஆச்சாரியர்களின் வ்யாக்கியானம் கொண்டு, அதிஅற்புதமாக விண்ணப்பம் செய்துள்ளீர்கள் ஸ்வாமி! அடியேன் 🙏🙏

  2. “சங்கமாகடல் கடைந்தான் – தண்முகில்காள் – செங்கண்மால்” – மேகங்களுக்குக் கொடுத்த உபதேசம், அவை கேட்ட கேள்வி, ஆண்டாள் அளித்த பதில்

    “போர்காலத்து எழுந்தருளி” என்று ஆபத்துக் காலத்தில் அடியாரை நேரே வந்து இரட்சித்தல்;

    “அம்பழ இலை” வீழ்வதுபோல் திருநாமம் கேட்டு இவள் வீழ்ந்தது – அவன் ஒருவார்த்தை மாஸு ச: என்று சொல்லாத ஆற்றாமை

    *இரண்டு அவதாரங்களில் இரண்டு ஒலிகள்” – இரண்டுமே இவளுக்கு உத்தேச்யமாயினபடி
    ==============
    ஒவ்வொரு பதத்திற்கும் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையினது உரைகொண்டு அதியற்புதமான அனுபவங்களை வழங்கியுள்ள ஸ்ரீ உ வே ராஜகோபால் கண்ணன் ஸ்வாமிக்கு அடியோங்களது ப்ரணாமங்களும், க்ருதஞதைகளும்.
    ==============
    தாசன்
    ப.வேங்கடகிருஷ்ணன்
    திருவல்லிக்கேணி

Leave a Reply to ஜோதி லக்ஷ்மிCancel reply