ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ *தை ௴* ஸ்வாமி கூரத்தாழ்வான் திருநட்சத்திர மஹோத்ஸவம். ஸ்வாமி கூரத்தாழ்வான் அனுபவமாக *அதிமானுஷ ஸ்தவம்* – மூன்றாவது பகுதி – ஸ்லோகங்கள் 17 TO 33 – *ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* வழங்குகிறார்.
இதில்,
**சக்கரவர்த்தித் திருமகனின் வ்ருத்தாந்தங்கள்.. இதில் பரத்வத்தை மறைக்க முடியவில்லையே!
**பெருமாள் பெரிய உடையாருக்கு எப்படி மோக்ஷம் அளிக்கலாம்
**ஸுக்ரீவ மஹராஜருடன் நட்பு கொண்டு வாலியை அழித்தது ஏன்?
**ஸ்ரீ விபீஷணாழ்வானுக்கு, ராவண வதத்துக்கு முன்பே, கடல் கடப்பதற்கு முன்பே முடி சூட்டியது எப்படி? (even before SWOT analysis, how this was done)
**ராம சேஷ்டிதங்களினூடே திருப்பாற்கடல் கடைந்த ஆச்சர்யங்கள்
**இன்று போய் நாளை வா – எந்த குண வகுப்பில் சேரும்?
**இளைய பெருமாளை ராவணப் பையல் தூக்க இயலவில்லை. ஆனால் திருவடி அனாயாசமாக கருமுக மாலை எடுத்துச் சென்றது போல் அமைந்தது எப்படி?
** புற்பா முதலா புல்லெறும்பாதிக்கு நற்பாலுக்குய்த்தது எப்படி?
**காகாசுரனுக்கு க்ருபை புரிந்தது
சக்கரவர்த்தித் திருமகனின். அதிமானுஷ சேஷ்டிதங்களை அனுபவிப்போம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 03
Dated 15-02-2021