இன்று நம்பெருமாள் தை பூபதி திருநாள் (தை தேர் ) உற்சவத்தின் முதல் நாள் ..
கடந்த வருடம் மார்ச் 20-ம் தேதி கொரோனா காரணமாக மூடப்பட்டு பெருமாள் எந்த வித உத்சவ கோவிலுக்கு வெளியே புறப்பாடுகள் எதுவும் இல்லாமல் – இன்று சுமார் 319 நாட்களுக்கு பிறகு நம்பெருமாள் கோவிலுக்கு வெளியே – உத்தர வீதியில் உலா வந்தார் .. இதை கொண்டாடும் விதமாக சர வெடிகள் வெடிக்கப்பட்டன ..
இன்று இன்னொரு முதல் ..
ஸ்ரீரங்கம் கோவிலின் இரண்டாம் யானை வழங்கப்பட்ட பின் – இன்று ஆண்டாலும் – ப்ரேமி என்கிற லக்ஷ்மி – சேர்ந்து அழகாக நம்பெருமாள் வீதி உலாவை முன்னே நடந்து வந்த அழகு அருமை ..
உள் வீதிகளில் பல வயதானவர்கள் – பெரும் திரளாக பல மாதங்களுக்கு பிறகு அரங்கனை தரிசனம் செய்தனர் ..
இதன் காணொளி இன்று இரவில் பதிவேற்றப்படும்
விஜயராகவன் கிருஷ்ணன்
Thanks to Sri Vijayaraghavan Krishnan