Thanks to Sri Raghavan Nemili
திருவல்லிக்கேணியில் ஸ்ரீ.மன்னாதனாகிய ஸ்ரீ.ரங்கநாதருக்கும் ஸ்ரீ.வேதவல்லித் தாயாருக்கும் இன்று (07.03.2020) இரவு 8.00 மணிக்கு கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆணடும் ,மாசி மாதம் சுக்ல பஷா த்வாதசி அன்று திருக்கல்யாண உற்சவாம் நடைபெரும்.
இன்றுசுக்ல பஷ த்வாதசி தினமாதலால் ஸ்ரீ.ரங்கநாதர் சிறிய சேஷவாஹனத்தில் மாலை 5.00 மணிக்கு பெரிய மாட வீதியில் புறப்பாடு கண்டருளினார்.
ஸ்ரீ.மன்னாதர் திருக்கோயிலுக்கு எழுந்தருளி ஸ்ரீ.வேதவல்லித் தாயார் மண்டபத்தை அடைந்த பின் ,ஸ்ரீ.வேதவல்லித் தாயாருடன் மண்டபத்தில் எழுந்தருளி திருக்கல்யாண உற்சவம் மிகவும் அற்புதமாக நடைபெரும்.
இன்றைய வீதி புறப்பாட்டில் ஸ்ரீ.ஆண்டாள் நாச்சியார்அருளிச் செய்த நாச்சியார் திருமொழி அருளிச் செயல் கோஷ்டியானது.
ஸ்ரீ.ரங்கநாதனின் அருள்கடாஷம் அடியோங்களுக்குக் கிடைக்கிறது.
நேற்று வரை ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ.நம்பெருமாளின் மாசி திருப்பள்ளியோட உத்சவத்தை சேவித்த நிலையில் , இன்று திருவல்லிக்கேணியில் ஸ்ரீ.ரங்கநாதனை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றது மிகவும் ஆனந்தமே.
ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமியும் , ஸ்ரீ.தெள்ளீயஸிங்கரும் , ஸ்ரீ.ரங்கநாதரும் என்றும் எம்மை மட்டுமல்ல பத்தர்கள் எவரையும் கை விடாமல் அருள் கடாஷம் அருளுவார்கள் என்பது நிச்சயம்.