Thanks to Sri Raghavan Nemili
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ.நம்பெருமாள், மாசி திருப்பள்ளியோடத் திருநாளின் நான்காம்
நாளான இன்று ( 01.03.3020), காலை திருக்கோயிலிலிருந்து காலை 6.30 மணிக்கு பல்லக்கில் உத்தர வீதிகளில் புறப்பாடு கண்டருளி, பின்னர் மூலத் தோப்பில் உள்ள காசுக்கடை செட்டியார் ஆஸ்தான மண்டபத்திற்கு வரும் வரை வழி நடை உபயங்கள் கண்டருளி மேற்படி மண்டபத்திற்கு பகல் 12.30 மணியளவில் எழுந்தருளி அந்த மண்டபத்தில் மாலை சுமார் 5.00 மணி வரை பத்தர்களுக்கு ஸேவை ஸாதித்துக் கொண்டிருந்தார்.
மாலை 6.00 மணிக்கு மேல் வெள்ளி கருட வாஹனத்தில் புறப்பாடு கண்டருளி, மூலத்தோப்பு வீதி, திருவடி வீதி வழியாக தெற்கு வாசலில் பெரிய கோபுரம் வழியாக உத்தர வீதிக்கு எழுந்தருளி, நான்கு உத்தர வீதிகளிலும் புறப்பாடு கண்டருளினார்.
ஸ்ரீ.நம்பெருமாளின் மாசி கருடஸேவை பத்தர்களுக்கு , அருமையாக ஸேவை ஸாதிப்பதோடு, நல் அருளாசி வழங்குகிறாராம்.
ஆதலால் பொதுவாக எல்லா உற்சவங்களிலும் பெருமளவு கூடும் பத்தர்கள், இந்த மாசி கருட ஸேவையின் போது வீதிகள் தோறும் பல்லாயிரக் கணக்கில் கூடியிருந்து , ஸ்ரீ.நம்பெருமாளை ஸேவித்து ஆனந்தம் அடைந்தனர்.