கருமாமுகிலுருவா!
கனலுருவா! புனலுருவா!
பெருமால் வரையுருவா!
பிறவுருவா! நினதுருவா!
திருமாமகள்மருவும்
சிறுபுலியூர் சலசயனத்து
அருமாகடலமுதே!
உனதுஅடியே சரணாமே.
வில்லிவாக்கம் ஸ்ரீ சௌம்ய தாமோதர பெருமாள் ஸ்ரீபாதம் அடியார் குழாத்தின் 2019 ஆண்டு சிறு புலியூர் க்ருபா சமுத்திரப் பெருமாள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை (15/12/19) காலை பெருமாள் கருட சேவையில் திருவீதி புறப்பாடு கண்டருளி, பின் பெருமாளுக்கு சூர்ய புஷ்கரிணியில் தீர்த்தவாரி இனிதே நடந்தேறியது. திருவீதி புறப்பாட்டில் உபதேஸ ரத்தின மாலை அருளிச்செயல் மற்றும் சாற்றுமுறை நடை பெற்றது. பின் பெருமாள் மற்றும் உபய நாச்சிமார்கள் பெரிய திருமஞ்சனம் இனிதே நடை பெற்று அருளிச்செயல் கோஷ்டி, சாற்றுமுறை, தீர்த்தம் மற்றும் ப்ரஸாத விநியோகம் கண்டருளினர்.
மாலை ஸ்ரீஅனந்தாழ்வான் ஸன்னிதியில் திருமஞ்சனம் நடை பெற்றது. பிறகு திருமாமகள் ( தயா நாயகி) தாயார் உள் புறப்பாடு மற்றும் சாற்றுமுறை.
Thanks to Sri Mannarkudi Uppili Srinivasan








Excellent photos write up and vedios