Thanks to Sri Raghavan Nemili
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ.ஆண்டாள் நாச்சியார் திருக்கோயிலில் ஐந்து கருடஸேவை.
ஸ்ரீ.ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீ.ரங்கமன்னார் திருக்கோயிலில் நேற்று (31.07.19) இரவு பத்து மணிக்கு மேல் ஸ்ரீ.ரங்கமன்னார், பெரிய பெருமாளாகிய ஸ்ரீ.வடபத்ரசயன பெருமாள், ஸ்ரீ.ஸ்ரீனிவாசப் பெருமாள், ஸ்ரீ.நரசிம்மர், ஸ்ரீ.காட்டழகர், திருத்தங்கல் நின்ற நாராயணாப் பெருமாள் திருக்கோயில் உற்சவர் இவர்கள் கருட வாஹனத்திலும், ஸ்ரீ.ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீ.பெரியாழ்வார் ஹம்ச வாஹனத்திலும் வீதி புறப்பாடு கண்டருளினர்.
அடியோங்கள் ஏற்கனவே , திருநாங்கூர் பதினோறு கருட ஸைவை , ஆழ்வார்திருநகரி ஒன்பது கருட ஸைவை ஸேவித்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஐந்து கருட ஸேவையை ஸேவிக்க முயன்றும் பல் வேறு காரணங்களினால் ஸேவிக்க இயலவில்லை. இந்த ஆண்டு எம்பெருமான் அனுக்ரஹம் கிடைத்ததால், நேற்று ஐந்து கருட ஸேவை உற்சவத்தினை ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்க பெற்றோம்.
இரவு 10.00 மணிக்கு மேல் புறப்பாடு கண்டிருளப்பட்ட நிலையிலும் ஒவ்வொரு வீதிகள் தோறும் ஆயிரக் கணக்கில் பத்தர்கள் குவிந்திருந்து , ஆங்காங்கே வீதிகளில் பெருமாள், ஸ்ரீ.ஆண்டாள் திருநாமத்தை உச்சரித்த வண்ணம் நடனமாடிக் கொண்டும், ஸேவித்துக் கொண்டும் வந்து கொண்டிருந்தனர்.