Srivili Thiruvadippoora mahotsavam day 4

Thanks to Sri Araiyar Balamukundachar

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் வார்ஷிக அவதாரோத்ஸவ
நான்காம் நாள் (நேற்று இரவில்),

கண்ணுள்ளும்
நெஞ்சுள்ளும்
நீங்காதொரு,

அர்ச்சக ஸ்வாமிகளின் கரஸ்பரிசத்தால்

நாளுக்கு நாள்
மெருகேறிக் கொண்டிருக்கும்

தேஜோமயமான
திவ்ய தம்பதிகள் ஸேவைதனை

ப்ராப்தியுள்ளவர்கள்
மட்டுமே
அநுபவிக்கமுடியும்…..

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் நின்றால் மரவடியாம்,

ஆதிசேஷன் மீதமர்ந்த

ஆண்டாள் நாச்சியாரின்
திவ்யமான ஸேவையோடு,

எமக்காகவன்றோ
இங்கு
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின்
மணாளனாக கைத்தலம்பற்றி,
நித்யவாஸம் பண்ணுமெங்கள் மன்னனார்
எப்படி,
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆதிசேஷன்
குடையின்கீழமர்ந்து
அருள்கடாக்ஷம்
அளிக்கிறாளோ,

அதேபோன்று
அவள் தன் மணாளனும்
குன்னுகுடையாக
ஆநிரைகாத்த
கோவர்த்தனகிரியினை
குடையாகப்பிடித்து
கொண்டு
திவ்ய தம்பதிகளாக எட்டுத்திக்கிலும்வந்து ஸேவை சாதிக்கும்
அழகை கண்டு ரசித்து கொண்டிருக்கும்

ஆயிரக்கணக்கான
பக்தர்கள் அருட்கடாக்ஷம் பெற்றுச்செல்வதுபோல்,

இன்று ஐந்து கருடபக்ஷிகளோடேகூட,

இரண்டு அன்னங்கள்
பறந்துவிளையாடும்
காக்ஷி வேறெங்கும்
அநுபவிக்கமுடியாது….

இரவில் சரியாக பத்துமணிக்கு
காத்திருப்போம்…..

லோகாஸமஸ்தா
ஸுகிநோபவந்து……

Leave a Reply