Thirumangai Azhvar’s Vedupari mahothsavam at Vanamamalai Thiruvaimozhith thirunaL 8

Thanks to Sri Vanamamalai Thothadri mutt20/01/2022 – இராப்பத்து 8ம் உத்ஸவத்தை முன்னிட்டு, திருமங்கையாழ்வார் வேடுபறி செய்யும் மஹோத்ஸவம் நம் வானமாமலையில் நடைபெற்றது.நம் தெய்வநாயகப் பெருமாள் ஆச்சர்யமாக குதிரை வாகனத்தில் எழுந்தருள, திருமங்கைமன்னன் வந்து ஆபரணங்களை கொய்து செல்கிறார்.பெருமாள், அர்ச்சகர் மூலம் கள்ளர் எவரென்று கண்டு வர, பின்னர் எம்பெருமான் மங்கை மன்னனுக்கு காட்சியளித்து, அவரைத் திருத்திப் பணிகொள்கிறார். வானமாமலை ஜீயர் முன்னிலையில் பெருமாளின் ஆபரணங்கள் சரிபார்க்கப் படுகின்றன.முடிவில் ஆழ்வாருக்கு திருமந்த்ராத்தம் விளங்கப் பெற்று, “வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்”, 10 பாசுரங்கள் ஸேவிக்கும் வண்ணம், அத்யாபகர்கள் ஸேவிக்கின்றனர்.மிகுந்த ஆச்சர்யமான இந்த நிகழ்வின் புகைப்படங்கள், உங்களுக்காக இங்கே..வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

Leave a Reply