ஸ்வாமி அருளாளப்பெருமாள் எம்பெருமானார் 1022வது திருவவதார திருநக்ஷத்திர மஹோத்ஸவம் பத்தாம் நாள் 28-11-2029 காலை 07.00 மணிக்கு ஸ்நபனத்திருமஞ்சணமும் அதைத்தொடர்ந்து திருமண்காப்பு,திருப்பல்லாண்டு திருப்பாவை பெரிய திருமொழி 10,11 பத்துக்கள் திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்,மற்றும் கண்ணிநுண்சிறுத்தாம்பு,திருவாய்மொழி பத்தாம் பத்து இராமாநுசநூற்றந்தாதி,ஞானஸாரம் ப்ரமேயஸாரம்,உபதேசரத்தினமாலை முதலிய ஸேவை முடிந்து ஸ்ரீநாச்சியார் சந்நிதியில் இருந்து ஸ்ரீநாச்சியார் திருமாலை திருப்பரிவட்ட பஹுமாணங்கள் எழுந்தருளி ஸ்ரீஸ்வாமிக்கு சாற்றப்பெற்று பிறகு சந்நிதி திருவேங்கடமுடையான் பஹுமாணம் ஆகி கோயில்,பெருமாள் கோயில், நவதிருப்பதி, திருமாலிருஞ்சோலைமலை,திருக்கூடல்,திருவல்லிக்கேணி,ஸ்வாமி நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், ஸ்ரீஸ்வாமி எம்பெருமானார் முதலான திவ்யதேச மற்றும் ஆழ்வார்கள் ஆசார்யர்களுடைய பஹுமாணங்கள் ஆகி தளிகை கண்டருளி சாற்றுமறை தீர்த்த ப்ரஸாத கோஷ்டியுடன் மாலை 02.55 மணியளவில் சிறப்பாக நடைபெற்று பூர்த்தியானது
Thanks to Sri Vinjamur Venkatachar Swamy