பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள்,
‘ஆறெனுக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்
இணைந்து வழங்கும் *பரகாலன் பனுவல்கள்*
திருமங்கை ஆழ்வார் அனுபவத் தொடரில்
*அடியேனை ஆட்கொண்டருளே*
என்னும் தலைப்பில் – வழங்குகிறார்
*ஸ்ரீ உ வே ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன் ஸ்வாமி*
ஒலிப்பதிவு எண்: 0002-PP—029 of 2
இதில்,
**திருவேங்கடமுடையானிடத்தில் சரணம் புகுதல்
**ஐந்து வகையான பாபங்கள்
**கைம்முதல் இல்லாமையைத் தெரிவித்தல்
**பிராட்டி புருஷகாரமாகச் சரணம் புகுதல்
**அப்பா, அண்ணா ஆனாய்.. கண்ணா
ஏழுலக்கு உயிராய பொழில் வேங்கட வேதியனை ஆழ்வார் சரணம் புகுவதை பயில்வோம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 03 கார்த்திகை | 18-11-2020
*தாயே தந்தையென்றும்* – திருமொழி வியாக்கியானங்கள் அருமையிலும் அருமை. ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன் ஸ்வாமிக்கு அநேக ப்ரணாமங்களும் க்ருதஞதைகளும்.
=========
திருவாய்மொழி “ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில், ஆழ்வார் “நீசனேன் நிறைவொன்றுமிலேன்” என்று உரைத்து, தன்னுடைய நீச பாவத்தை வெளியிடுகிறார். இப்படி, “நீசனேன் நிறை ஒன்றும் இலேன்” என்று ஆழ்வார் உரைத்த விஷயங்கள் – நீச விஷயங்கள் யாவை என்பதைக் கலியன் “தாயே தந்தையென்றும்” (1.9) திருமொழியின் முதற் பாசுரம் தொடங்கி, “மற்றேல் ஒன்றறியேன்” என்று 9ஆம் பாட்டு வரை விரித்துரைத்து, “நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன்” என்றும், விஷயாந்தரங்களிலே உழன்று உழன்று துக்கப்பட்டதை “பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்” என்றும் பலவாறாகத் தெரிவித்து,
“உலகமுண்ட பெருவாயா” திருவாய்மொழியில் (6.10) ஆழ்வார் பிராட்டியின் புருஷகாரத்தைப் பற்றிக்கொண்டு “அலர்மேல் மங்கையுறை மார்பா!” என்றழைத்து திருவேங்கடமுடையானிடத்தில் சரண் புகுந்ததுபோல்,
“தாயே தந்தையென்றும்” திருமொழியின் 10ஆம் பாசுரத்தில் *மாதவனே !* என்று பிராட்டி சேர்த்தியோடு கூடிய எம்பெருமானிடத்தில் சரண் புகுகிறார்.
========
Wonderful anubavam exhibited by “ஸ்ரீ உ வே கிடாம்பி வேங்கடேசன் ஸ்வாமி” in this audio.
========
தாசன்
ப.வேங்கடகிருஷ்ணன்
திருவல்லிக்கேணி
dhanyosmimn swamy