சித்திரகூ டத்துஇருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமாவோ நின்னபயம் என்றுஅழைப்ப
அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும்ஓ ரடையாளம்.
வனவாசத்தின் போது சித்திரகூட மலையில் சீதாப்பிராட்டியின் மடியில் ஸ்ரீராமபிரான் தலைவைத்து சயனித்திருக்கும்போது ஜெயந்தன் என்னும் அசுரன் (காகாசுரன்) காகம் வடிவிலே பிராட்டியைத் துன்புறுத்த, பெருமாள் விழித்து காகம் மேல் கோபம் கொண்டு அஸ்திரத்தை வீச, அந்த அஸ்திரத்திலிருந்து தப்பிக்க மூன்று உலகங்களுக்கும் ஓடிப்பார்த்து முடியாமல் பிராட்டியின் திருவடியிலேயே வந்து விழுந்தது.
பிராட்டியும் காகம் மேல் இரக்கம் கொண்டு அதற்கு உயிர்ப்பிச்சை அளிக்க பெருமாளிடம் வேண்ட, பிராட்டியின் சிபாரிசுக்காக காகத்தைக் கொல்லாமல் அதன் ஒரு கண்ணை மட்டும் அறுத்து உயிர்ப்பிச்சை அளித்தார்.
இப்படி தன்னைத் துன்புறுத்தியவனுக்கே இரக்கம் காட்டியவள் பிராட்டி. நம் போன்ற பக்தர்களுக்கு இரங்கமாட்டாரா?.
இந்தப் பாசுர நிகழ்வை விளக்கும் வகையில் இன்றைய சயன சேவை.
வேறெங்கும் காணமுடியாத தரிசனம்.
கண் பெற்ற பயன் இத்தரிசனம் காணவே.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருவாடிப்பூர உத்ஸவம் 7ம் திருநாள் 22.07.2020
நன்றி : Viji Photos Srivi
Thanks
Sri Sampath