Thanks to Sri Raghavan Nemili
ஸ்ரீரங்கத்தில் இன்று காலை 6.30 மணிக்கு ஸ்ரீ.ஃகுலசேகர ஆழ்வார் புறப்பாடு கண்டருளி, ஸ்ரீ.ரங்கநாதர் ஸன்னதியில் மங்களா ஸாஸனம் ஆன பின்னர் அங்கிருந்து ஸ்ரீ.நம்மாழ்வார் ஸன்னதிக்கு எழுந்தருளி அங்கும் மங்களா ஸாஸனம் ஆன பின்னர் சித்திரை வீதிகளில் புறப்பாடு கண்டருள ஸ்ரீரங்கா, ஸ்ரீரங்கா கோபுரம் வழியாக வந்து தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதிகளில் எழுந்தருளி பின்னர் வடக்கு சித்திரை வீதி வழியாக ஸ்ரீ.ரங்கநாயகித் தாயார் ஸன்னதிக்கு எழுந்தருளி, அங்கு மங்களா ஸாஸனம் ஆன பின்னர் வடக்கு சித்திரை வீதியின் மீதமுள்ள பகுதி வழியாக, கிழக்கு சித்திரை வீதியில் வந்து, பின்னர் தெற்கு சித்திரை வீதியின் வழியாக திருக் கோயிலுக்குள் எழுந்தருளி, ஸ்ரீ.உள் ஆண்டாள் ஸன்னதியில் மங்களா ஸாஸனம் கண்டருளி, சந்திர புஷ்கரணியை ஒட்டியுள்ள ஸ்ரீ.கோதண்ட ராமர் ஸன்னதிக்கு எழுந்தருளினார். இந்தச் சன்னதியில் தான் ஸ்ரீ.குலசேகர ஆழ்வாரும் ஸேவை ஸாதிக்கிறார்.
வீதி புறப்பாட்டின் போது இராமாநுச நூற்றந்தாதி அருளிச் செயல் கோஷ்டியானது.