Thanks to Sri Raghavan Nemili
ஸ்ரீரங்கம் ஸ்ரீ.நம்பெருமாள் தெப்போத்சவத்தின் ஏழாம் நாளான இன்று (04.03.2020) மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ.நம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் சந்தனு மண்டபத்திலிருந்து எழுந்தருளி, நெல்லளவு கண்டருளி உத்தரவீதிகளில் புறப்பாடு கண்டருளினார்.
ஸ்ரீ.நம்பெருமாளை உபயநாச்சிமார்களுடன் வீதி புறப்பாட்டில் சில நாள்களில் மட்டுமே ஸேவிக்க முடியும். பத்தர்களுக்கு இன்று அந்த பாக்கியம் கிடைக்கப் பெற்றது.
வீதி புறப்பாட்டில் ஸ்ரீ.திருமழிசை ஆழ்வார் அருளிச் செய்த திருச்சந்தவிருத்தம் அருளிச் செயல் கோஷ்டியானது.