Thanks to Sri Raghavan Nemiliபூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ.நம்பெருமாள் திருஅத்யயன உற்சவத்தின் இராப்பத்தின் ஆறாம் நாளான இன்று ( 11.01.2020 ) பகல் ஒரு மணிக்கு மேல், பரமபத வாசலிலிருந்து எழுந்தருளி, சந்திரபுஷ்கரணி, மற்றும் மணல் வெளி பகுதியில் வழி நடை உபயங்கள் கண்டருளி, மணல் வெளியில் ஸ்ரீ.நம்மாழ்வார், ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார், ஸ்ரீ.இராமாநுசருக்கு மரியாதைகள் ஆகி, பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் மணல் வெளியில் எழுந்தருளினார்.
அங்கு எல்லா ஆழ்வார்களுக்கும், ஆச்சாரியர்களுக்கும் மாலை, ஸ்ரீ.சடகோபன் ஸாதிக்கப் பெற்று மரியாதைகள் ஆகி பின்னர் மணல் வெளியில் பத்தி உலாத்தல் ஆகி, புறப்பாடு கண்டருளி திருமாமணி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
