Thanks to Sri Raghavan Nemili
இன்று ( 09.01.2020 ) ஸ்ரீ.நம்பெருமாள் திருஅத்யயன இராப்பத்து உற்சவத்தின் நான்காம் நாள், பகல் 1.00 மணிக்கு பரமபத வாசல் வழியாக சந்திரபுஷ்கரணியின் ஒரு பக்கத்தின் வழியாக மணல் வெளியில் எழுந்தருளினார்.
அங்கு ஸ்ரீ.நம்மாழ்வார், ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார், ஸ்ரீ.இராமாநுசர் எழுந்தருளியிருக்க , அருளிச் செயல் கோஷ்டியினர், ஸ்ரீரங்கராஜஸ்தவம் ஸேவித்துக் கொண்டிருந்தனர்.
மணல் வெளி வழியாக எழுந்தருளிய ஸ்ரீ.நம்பெருமாள் ,ஆழ்வார்களுக்கும், ஸ்ரீ.இராமாநுசருக்கும் மரியாதைகள் செய்வித்தார். பின்னர் அங்கிருந்து ஆயிரங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளி, அங்கு பத்தி உலாத்தல் நடைபெற்ற பின்னர் , ஆழ்வார்கள், ஸ்ரீ.இராமாநுசருடன் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்திற்கு எழுந்தருள உள்ளார்
சந்திர புஷ்கரணி பகுதியிலும், மணல் வெளியிலும் பல உபயதாரர்களுக்கு , பரிவட்டம் கட்டி, ஸ்ரீசடகோபன் ஸாதிக்கப்பட்டு, தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.