Srirangam thirunedunthandakath thirunal

Thanks to Sri Raghavan Nemili

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ.அரையர் ஸ்வாமிகள், ஸ்ரீ.ரங்கநாதர் மூலஸ்தானத்தில், இன்று (26.12.19) ,திரு அத்யயன உற்சவத்தை முன்னிட்டு, ,திருநெடுந்தாண்டகம் ஸேவிக்கும் பொருட்டு திருக்கோயிலுக்கு எழுந்தருளினர்.

கிழக்கு உத்தர வீதி வெள்ளை கோபுரம் வழியாக திருக்கோயிலுக்குள் எழுந்தருள, நேராக ஸ்ரீ.எம்பெருமானார் ஸன்னதிக்கு சென்று அங்கு ஸ்ரீ.எம்பெருமானாரை ஸேவித்து, ஸ்ரீ.எம்பெருமானார் ஸன்னதியை ஒட்டியுள்ள ஸ்ரீ.பார்த்தசாராதி ஸ்வாமி ஸன்னதிக்கு சென்று ஸேவித்துவிட்டு , அங்கிருந்து நேராக ஸ்ரீ.நம்மாழ்வார் ஸன்னதிக்கு எழுந்தருளினர்.

அங்கு ஸ்ரீ.நம்மாழ்வார் ,அரையர்கள் , அரையர் ஸேவை தொடங்க அனுமதி அளிக்கும் பொருட்டு ஸ்ரீமுகம் என்னும் கடிதத்தை வழங்க, அதனைப் பெற்றுக் கொண்ட அரையர்கள், ஸ்ரீ.ரங்கநாதர் மூலஸ்தானத்திற்கு எழுந்தருளினர்.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ.திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த திருநெடுந்தாண்டகத்தின் ” மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் * விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய் * பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பு இல்லாப் * பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது * எண்ணும் பொன்னுருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய்ப் * புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி * தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை * தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே * ” என்ற முதல் பாசுரம் தொடங்கி முப்பது பாசூரங்காளையூம் ஸேவித்தனர்.

பகல் பத்தில் நாளை முதல் ஸ்ரீ.நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருள, அரையர் ஸேவை சில நாள்கள் ஒரு வேளையும் ( காலை சுமார் 7.45 மணிக்குத் தொடங்கி 1.00 மணி வரையிலும், சில நாள்கள் இரண்டு வேளையும் (காலை 7.45 மாணி முதல் 12.00 மணி வரையிலும் , அடுத்து 1.00 மணி முதல் 3.30 மணி வரையிலும் ) அற்புதமாக நடைபெரும்.

சில பாசுரங்களுக்கு அரையர் ஸ்வாமிகள் அபிநயத்துடனும் , வியாக்யானங்களுடனும் பாசுரங்களை ஸாதிப்பர்.
திருக்கோயிலிலிருந்து வெளியில் வரும் போது பரமபத வாசலையும், அதற்கு மேலுள்ள கோபுரத்தையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளேன்.

Leave a Reply