Thanks to Sri Raghavan Nemiliஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி முதல் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட ரத்னாங்கியில் இன்றைய புரட்டாசி ஏகாதசி ( 25.09.19) தினத்தில் பெரிய மாட வீதியில் ஸ்ரீ.பேயாழ்வார் அவரது அவதார ஸ்தலமான திருமயிலையில் இருந்து எழுந்தருளி அவரும் ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமியுடன் புறப்பாடு கண்டருளினார்.ஸ்ரீ.பார்த்தசாரதி எம்பெருமானை ரத்னாங்கியில் ஸேவிக்க திருக்கோயிலுக்குள் ஏராளமான பத்தர்கள் கூடியிருந்ததோடு, வீதிகளிலும் பெரும்திரளான பத்தர்கள் கூடி எம்பெருமானின் அற்புத ரத்னாங்கி ஸேவையை அற்புதமாக ஸேவித்து பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.இன்று அடியோங்களும் ஸ்ரீரங்கத்திலிருந்து வந்திருந்து ஸ்ரீ.பார்த்தசாரதி பெருமாளையும், ஸ்ரீ.பேயாழ்வாரையும் ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றோம்.
