Thanks to Sri Raghavan Nemiliஉரையூரில் நாளை ( 01.09.2019 ) நடக்க இருக்கும் சம்ரோக்ஷணத்தை முன்னிட்டு நான்காம் நாளான இன்று (31.08.19) நடைபெரும் ஹோமத்தை முன்னிட்டு ஸ்ரீ.கமலவல்லிநாச்சியாருடன், ஸ்ரீ.கண்ணனும், ஸ்ரீ.அழகியமணவாளரும் சேர்ந்தும், ஸ்ரீ.நம்மாழ்வாரும், ஸ்ரீ.திருப்பாணாழ்வாரும், ஸ்ரீ..எம்பெருமானாரும் உள் புறப்பாடு கண்டருளி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த போது எடுத்த புகைப்படங்களின் ஒரு பகுதியை இப்பொழுது பதிவிடுகின்றேன்.அடுத்து அருளிச் செயல் கோஷ்டி மற்றும் ஹோம நிகழ்ச்சி படங்களை அடுத்து பதிவிடுகின்றேன்.அற்புதமாக ஸேவை ஸாதித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ.கமலவல்லித் தாயாரையும், தாயாருக்கு வலது புறம் ஸ்ரீ.கண்ணனும், இடதுபுறம் ஸ்ரீ.அழகியமணவாளப் பெருமாளும் அடுத்து ஸ்ரீ.நம்மாழ்வார், ஸ்ரீ.திருப்பாணாழ்வார், ஸ்ரீ.எம்பெருமானாரையும் பத்தர்கள் அனைவரும் ஸேவித்து இன்புற்று ஆனந்தமடையவே இந்தப் பதிவு.
