Thanks to Sri Raghavan Nemili
ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கநாயகித் தாயார் ஜ்யேஷ்டாபிஷேகம் இன்று ( 19.07.19) .
காலை 7.30 மணிக்கு காவிரி நதியின் அம்மா மண்டபம் கரையிலிருந்து திருமஞ்சனத்திற்காக,குடங்களில் தீர்த்தம் எடுத்து யானையின் மீதும் மற்றும் பல ஸ்ரீவைஷ்ணவர்கள் திருக்குடங்களை திருக்கரங்களில் மூலம் தோளில் வைத்துக் கொண்டு, சக்கரத்தாழ்வார் ஸன்னதி மற்றும் வசந்த மண்டபம் பகுதி வழியாக தாயார் ஸன்னதி வந்தடைந்து தீர்த்த திருக்குடங்களை ஏகாந்த ஜ்யேஷ்டாபிஷேகத்திற்காக தாயார் ஸன்னதியில் சேர்த்தனர்.
பின்னர் கைங்கர்யபரர்களும், கோஷ்டியினரும் தாயார் வஸந்த மண்டபத்திற்கு செல்ல அங்கு தாயாரின் திருவடிகளையும் , அபயஹஸ்தம், அங்கி , கிரிடம் முதலியன ஸாதிக்கப்பட்டது.
பின்னர் பொது மக்களாகிய பத்தர்கள் வஸந்த மண்டபத்திற்கு செல்ல, அவர்கள் அனைவருக்கும் ஸ்ரீ.ரங்காநாயகித் தாயார் சூடிக் கொண்டிருக்கும் அபயஹஸ்தமும், அங்கியும் ஸாதிக்கப் பட்டது பெரும் பாக்கியமே.
அதே நேரத்தில் தாயார் ஸன்னதியில் ஏகாந்த ஜ்யேஷ்டாபிகம் நடந்து கொண்டிருந்தது.
ஸன்னதியின் உள் பகுதியிலிருந்து திருமஞ்சனம் செய்யப்பட்ட பால் போன்றவை ஊஞ்சல் மண்டபத்தின் வெளிப்பகுதியில் வர , பத்தர்கள் அனைவரும் அவற்றை தங்கள் கரங்களில் எடுத்துக் கொண்டு தங்கள் தலையில் ஸாதித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வெளியில் வந்தனர்.
ஜ்யேஷ்டாபிஷேகம் முடிந்து ஒரு இரண்டு மணி நேரம் கழித்து பத்தர்களுக்கு தீர்த்தமும், ஸடாரியும் ஸாதிக்காப்படுமாம்.