Thanks to Sri Krishna Vasudevan
Yesterday , July 15 , 2019 was Sri Sailesa Thanian Avathara day .Also periya Perumal Thiruppaavadai. Please listen to the Soul stirring Musical rendering of Sampradaya Chandrika and Sri Sailesa Vaibhavam by Manavala MamunigaL sannidhi Adheenakartha Sri. U.Ve. gomadam sampath swamy , 85 years old.
ஸ்ரீ அப்பிள்ளார் அருளிச்செய்த ஸம்ப்ரதாய சந்த்ரிகை
நூல்
1. ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர்
அவனியிலே இரு நூறாண்டு இரும் நீர் என்ன
பாதியிலே உடையவராய் வந்து தோன்றி
பரமபதம் நாடி அவர் போவேன் என்ன
நீதியாய் முன் போல் நிற்க நாடி
நிலுவை தனை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் என்னும் மா வருடம் தன்னில்
தனித்துலா மூல நாள் தான் வந்தாரே
2. நற்குரோதன வருட மகரமாத
நலமாகக் கன்னிகையை மனம் புணர்ந்து
விக்கிரம வற்சரத்தில் வீட்டிருந்து
வேதாந்த மறைப் பொருளைச் சிந்தை செய்து
புக்ககத்தில் பெண்பிள்ளை போலேசென்று
புவனியுள்ள தலங்கள் எல்லாம் வணங்கி வந்து
துக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத்
துரிய நிலை பெற்று உலகை உயக் கொண்டாரே
3. செய நாமமான திருவாண்டு தன்னில்
சீரங்கராசருடைத் திருநாள் தன்னில்
செயமாகத் திருவீதி வாரா நிற்கத்
தென்னாட்டு வைணவர் என்று ஒருவர் வந்து
தயையுடைய மணவாளப் பெருமாள் ஆனார்
தன் முன்பே ஓரருத்தம் இயம்பச் சொல்லி
சயனம் செய்து எழுந்து இருந்து சிந்தித்து ஆங்கே
சந்தித்துக் கோயில் காத்து அருளினாரே
4.வதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடி வணங்கிக்
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும்
கண்ணனே! அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீசைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்குச் சென்மின் நீவீர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார்
5. சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியை கேளா நிற்பச்
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னி தனில் நீராடி புகழ்ந்து வந்து
புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
சந்நிதியினின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே
6. நல்லதோர் பரீதாபி வருடம் தன்னில்
நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்குவெள்ளித் தொல்கிழமை வளர் பக்க நாலா நாளில்
செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில்
செழும் திருவாய்மொழிப் பொருளைச் செப்பும் ன்றே
வல்லியுரை மணவாளர் அரங்கர் நங்கண் மணவாள மாமுனிக்கு வழங்கினாரே
7. ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீரிட்ட வழக்கே என்ன
மணவாள மாமுனிகள் களித்திட்டாரே
8. தேவியர்கள் இருவருடன் சீர் அரங்கேசர்
திகழ் திருமாமணிமண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத்
தமிழ்மறையை வரமுனிவன் உரைக்கக்கேட்ட
ஆவணி மாசம் தொடங்கி நடக்கும் நாளில்
அத்தியனத் திருநாள் அரங்க நாதர்
தாவமற வீற்றிருந்து தருவாய் என்று
தாம் நோக்கி சீயர் தமக்கு அருளினாரே
9. அருளினதே முதலாக அரங்கருக்கும்
அன்று முதல் அருந்தமிழை அமைத்துக் கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்து டனே கூட்டித்
திகழ் திருமாமணி மண்டபத்தில் வந்து
பொருள் உரைக்கும் போதெல்லாம் பெருமாளுக்குப்
புன்சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேத
மதுகேட்டுச் சாற்றியது இத் தனியன் தானே
10.நாமார் பெருஞ்சீர் கொள்மண்டபத்து நம்பெருமாள்
தாமாக வந்து தனித்தழைத்து –நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும்பொருளை நாள்தோறும் வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து.
11. சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பப்
போற்றித் தொழு நல்ல அந்தணர் வாழவிப் பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள முனி வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளியல்லவோ தமிழ் ஆரணமே
Video courtesy : Mani Vannan
What about the opening Srisailesha Dayapatram Thanian? Not captured in the video. It is specially the Srisailesha Dayapatram Thanian Day is it not?
https://koilathan.files.wordpress.com/2012/10/aani-thirumulam-pasurams-anushtanam-koil-athan-file.pdf for the full verses.