வைராக்ய பஞ்சகம் …

புரட்டாசி திருவோண ஸ்வாமி தேசிகன் திருநட்சத்திர வைபவத் தொடரில், வைராக்ய பஞ்சகம் என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருக்கோவலூர் மணிவண்ணன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்

**வைராக்கிய பஞ்சகம் தோன்றியதற்கு காரணம்
**பூர்வாங்க ஸ்லோகம்
**ஸ்ரீ வேதாந்தாச்சார்யாரின் வைராக்கியம்
**வைராக்கியம் என்றால் என்ன?
**ஸ்ரீ கூரத்தாழ்வான் போன்ற ஆசார்யர்கள் முன்னோடிகள்..
**சாடுக்தியான பதங்களைக் கொண்ட ஸ்லோகங்கள்
**பாட்டனாரின் சொத்து
**அல்ப ராஜாக்களுக்கு கர்வம்.மானிடம் பாடுவதோ!!
**கைப்பிடி தானம் கொடுத்த குசேலருக்கு தயைபுரிந்த எம்பெருமானையே ஆஸ்ரயிப்போம்
**நரேந்திரர்கள் அல்ல தேவாதிராஜனே நமக்குத் தஞ்சம்
**சிலவிருத்தி.. உஞ்சவ்ருத்தி. .கந்தல் துணி..
**வடவாமுகாக்னி போல் ஜாடராக்னி கொள்ளென்று கிளர்தெழுந்தாலும் வேறு யாரையும் ஆஸ்ரியோம்
**என் நாவிலின் கனி யானொருவர்க்கும் கொடுக்கிலேன்
**கடைத்தலை நிற்கை அவத்யமிறே
**தனஞ்செய பூஷணமே தனம்
**தனம் தன்தனம் தனம்…. 11 முறை ப்ரயோகம்
**தநந்ஜய விவர்த்தனம்.. கோவர்த்தனன்.. ஸுஸாதனம்.. அபாதனம்.. ஸ்மாராதனம் .
ஸ்வாமி வேதாந்தாச்சார்யாரின் சரித்திரத்தில் நடந்த அவரின் வைராக்கியத்தை ப்ரதிபாதிக்கும் அதியற்புரமான வடமொழி ஸ்லோகத்தை எளிமையாக விளக்குவது கேட்டு, ‘மெய்யான தனம் எது’ என்று உணர்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
புரட்டாசி 09 – 25-09-2020

Leave a Reply